திருவண்ணாமலையில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் 4வது தெருவில் கோபி, விஜி தம்பதியினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு ஒரு ஆண் குழுந்தை மற்றும் பெண் குழுந்தை உள்ளனர். இன்று காலை இவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் பெட்ரோல் குண்டு வீச்சில் சிக்கி தீக்கிரையானது. தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்திலிருந்து விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை