• சற்று முன்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 2021 ஆம் ஆண்டின் விருதுகள் வழங்கும் விழா - சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு



    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும்  உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் (2021) சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா சென்னை பிராட்வே சாலையில் அமைந்துள்ள ஹயாத் மஹாலில் இன்று (செப்.18, சனிக்கிழமை) நடைபெற்றது.



    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, நக்கீரன் குழும ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


    இவ்விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அச.உமர் ஃபாரூக், மாநில செயலாளர்கள் ரத்தினம், வழக்கறிஞர் சஃபியா நிஜாமுதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், சுல்பிகர் அலி, ஷபீக் அஹமது, வழக்கறிஞர் ராஜா முகம்மது, டாக்டர் சேக் மீரான், பசீர் சுல்தான், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் மற்றும் சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர்கள் இஸ்மாயில், ஹுசைன், ரஷீத், சீனி முகமது, சலீம், பிலால் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக காயிதே மில்லத் விருது ஆல் இந்தியா மில்லி கவுன்சில் தலைவர் இப்னு சவூத் அவர்களுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது மறைந்த அருட் தந்தை ஸ்டேன்சாமி அவர்களுக்கும், காமராஜர் விருது அகரம் ஃபவுண்டேஷன் கல்வி அறக்கட்டளைக்கும்,  கவிக்கோ விருது ஜே.எம்.கே. அரபிக் கல்லூரி பேராசிரியர் மெளலானா மெளலவி தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி அவர்களுக்கும், பழனிபாபா விருது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் அவர்களுக்கும்,  நம்மாழ்வார் விருது இயற்கை விவசாயி சா.காதர் மீரான் அவர்களுக்கும், அன்னை தெரசா விருது மருத்துவர் அனுரத்னா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad