இந்திய எல்லை பகுதியில் சுற்றி திரிந்த டுரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்
ஜம்மு காஷ்மீரில் வெடிபொருட்களுடன் பறந்துவந்த ட்ரோனை பாதுகாப்புப்படையினர் சுட்டுவீழ்த்தினர்.ஜூன் மாதம் 27-ஆம் தேதி ஜம்மு விமானப்படைத் தளத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள கனச்சக் என்ற இடத்தில் ட்ரோன் ஒன்றை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதனை ஆய்வு செய்தபோது வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது. ட்ரோனைக் கைப்பற்றியுள்ள அதிகாரிகள், அது பாகிஸ்தான் பகுதியிலிருந்து அனுப்பப்பட்டதா என விசாரணை நடத்திவருகின்றனர்.
கருத்துகள் இல்லை