Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் கிராமத்தில் உலக விலங்குகள் மூலம் பரவும் நோய் தடுப்பு தினம்.


     திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் கிராமத்தில் உலக விலங்குகள் மூலம் பரவும் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அமர் குஷ்வாஹா I.A.S. அவர்கள் தலைமையில் அடைப்பான் நோய். வெறிநாய்க்கடி நோய் இரண்டிற்கும் தடுப்பூசி போடப்பட்டது. அப்பகுதி மக்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு,மாடு,நாய் போன்ற விலங்குகளை கொண்டுவந்து தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர்.வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். வீட்டில் வளர்க்கும் நாய்க்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். இறந்த ஆடு மாடுகளை சாப்பிட கூடாது எனவும் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கால்நடைகளுக்கு முறையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    உலக விலங்குகள் மூலம் பரவும் நோய்த் தடுப்பு தினமான இன்று 06.07.2021 திரியாலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அமர் குஷ்வாஹா I.A.S. அவர்கள் தலைமையில் கால்நடைகளுக்கு ஆடு மாடு நாய் போன்றவற்றிற்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. 

    இதில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு.த.ரா. செந்தில். உதவி இயக்குனர். கால்நடை பராமரிப்பு துறை மரு. நாசர். மாவட்ட பூச்சியல் வல்லுநர் காமராஜ். புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மரு. மீனாட்சி மற்றும் (பி.ஆர் ஓ) அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் ஏ.ஒபேத்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad