ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்
ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் ஐசிஎப் காலனி ஓம்சக்தி தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் நேற்று அயப்பாக்கம் தனியார் மேல்நிலைப் பள்ளி அருகே நண்பர்களுடன் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியாக வந்த திருமுல்லைவாயில் காவல் நிலைய தலைமை காவலர் சந்தோஷ் பாக்கியராஜிடம் அந்த இடத்தில் இருந்து கிளம்புமாறு கூறி ஆட்டோ ஓட்டுநர் புதிதாக வாங்கிய செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.
அதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் பாகிராஜ் பீர்பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து மருத்துவனையில் இருந்து பாக்கிராஜின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைமை காவலர் சந்தோஷிடம், துணை ஆணையர் மகேஷ் விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து தலைமை காவலர் சந்தோஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை