Header Ads

  • சற்று முன்

    ஆளுநரின் உரை பெருத்த ஏமாற்றமளிக்கிறது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்

    தமிழ்நாட்டில் 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (21.06.2021) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது , ''முக்கியமான வாக்குறுதிகள் கூட ஆளுநரின் உரையில் இடம்பெறவில்லை. பெருத்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார்.  அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இப்போது முதலமைச்சராக இருக்கிறார். அன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். ஆனால் அதற்கு மாறாக கமிட்டியை அமைத்திருக்கிறார்கள். நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad