வடசென்னை கிழக்கு மாவட்டம் இராயபுரம் டாக்டர் தெய்வத்திரு ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது
காஷ்மீரின் முழு இணைப்புக்காக பலிதானம் ஆனவர். இந்து மகா சபாவில் வீர சாவர்க்கர்க்கு துணை நின்றவர். பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க் கட்சித் தலைவர். நேரு ஷேக் அப்துல்லாவின் கூட்டுச் சதியால் கொல்லப்பட்டதாக கருதப்படுபவர். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதியும் ஆவர்.சுதந்திர இந்தியாவின் முதல் நடுவண் அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக, ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் 15 ஆகஸ்டு 1947 முதல் 6 ஏப்ரல் 1950 வரை இருந்தவராவார்.
இவர் ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார்.பின் இக்கட்சியின் பெயர் பாரதிய ஜனதா கட்சி என மாறியது.
கருத்துகள் இல்லை