நேற்று பெய்த கனமழையில் மரம் கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெரு வார்டு 49ல் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று நேற்று நள்ளிரவு திடிரென முறிந்து சாலையில் விழுந்தது. மரம் நள்ளிரவு நேரத்தில் சாலையில் முறிந்து விழுந்ததால் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் என்பதால் விபத்து ஏதேனும் ஏற்படவில்லை. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த சென்னை மாநகராட்சி சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அப்புறபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஒவ்வொரு தெருவிலும் சாலையோர மரத்தின் மரக்கிளைகளை சென்னை மாநகராட்சி அவ்வபோது வெட்டி சீர்செய்து வந்தால் இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடப்பதை தவிர்கலாம் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.
செய்தியாளர் : ராஜ்குமார்
கருத்துகள் இல்லை