பத்திரிக்கைகள் ஜனநாயத்தின் நான்காவது தூண்
நான்காவது தூண் பத்திரிக்கைகள் என்பது சொல்வதற்கும் , கேட்பதற்கும் நன்றாகத்தான் உள்ளது.
* இந்தப் பெயர் எப்போது வந்தது ? * இந்தப் பெயர் ஏன் வந்தது ? * எந்த நோக்கத்தில் வந்தது? * நடைமுறைச் செயல்பாடுகள் அவ்வாறு உள்ளதா?
பிரெஞ்சுப் புரட்சி தோல்விக்குப் பின்னால் வந்த அரசால் இப்பெயர் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சியின் போது அச்சு ஊடகங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றி தங்களின் போராட்டத் திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். புரட்சி தோல்விக்குப் பின்னால் தோன்றிய அரசு " ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற கொள்கைகளை உருவாக்கியது.
இதுபோன்ற புரட்சிக்கு மீண்டும் பத்திரிக்கைகள் துணை போகக் கூடாது என்ற அடிப்படையில் அரசியல், அரசாங்கம். நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகளை தட்டிக் கேட்கும் வகையில் ..... ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிக்கைகள் என்று அறிவிக்கப்பட்டன..
மக்களாட்சி என்று அறிவித்துக் கொண்ட. நாடுகள் தங்களது அரசியல் சட்டத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற கொள்கைகளை. ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு செய்தனர். முதலாளித்துவ நாடுகளில் ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பெரும்பாலும் செயல்படாது. கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கிக் கொள்ளும். இடதுசாரி கட்சிகள் நடத்தும் பத்திரி கைகள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களே கார்ப்பரேட் எதிர்ப்பில் முனைப்பாக செயல்படுகின்றன.
இளசை. கணேசன்
கருத்துகள் இல்லை