Header Ads

  • சற்று முன்

    திருச்சி மாவட்ட மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் காந்தி மார்க்கெட்டில் ஒரே நாளில் காய்கறி விலை வாசி மூன்று மடங்கு விலை ஏற்றம் ...



    மாண்புமிகு தமிழக முதல்வர் தமிழக மக்களை பெருந் தொற்றிருந்து  காக்கும் வகையில் 10. 5.21 முதல் 24.5.2021 வரை முழு ஊரடங்கு அறிவித்தார் ..

    ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சனி ஞாயிறு இரண்டு நாள் முழுவதும் கடைகள் செயல்படும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வழிவகை செய்தார் ..  கோவிட்.19..2020 சென்ற வருடம் போல் அதிரடி உத்தரவினால் மக்களை அவதிக்குள் ஆக்காமல்  இந்த இரண்டு நாள் கடை உண்டு என்ற அறிவிப்பால் பொது மக்கள் பயனடைவார்கள் அவரவர்கள்  தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நல்ல எண்ணத்தோடு அறிவிப்பு இருந்தாலும், இந்த இரண்டு நாட்கள் காந்தி மார்க்கெட் காய்கறி கடைகள் செயல்படுத்துவதற்கு என்ன என்ன  விதிமுறைகள் இன்று விசாரிக்க திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலர்கள் ..உதவி வருவாய் அலுவலர் (ARO ) சிவசங்கர் அவர்களையும் அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் (AC) கமலக்கண்ணன் அவர்களையும் அலைபேசியில் அழைத்தபோது அவர்கள் அலைபேசியின் தொடர்பை துண்டித்தார்



    இந்நிலையில் நாளை (ஞாயிறு) காந்தி மார்க்கெட் நுழைவாயில்கள் திறக்கப்படுமா? என மொத்த வியாபாரிகள் என்னிடம் கேட்கிறார்கள்..

    அதாவது சென்ற இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில்  அதிகாலை 4 மணிக்கு கேட்டுகள் திறந்ததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இன்று இந்த வாரமும் அப்படியானால் என்ன செய்வது நாங்கள் காய்கறி சரக்கு வாகனங்களில் வரச்சொல்லி கேட்  திறக்காவிட்டால் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை யார் தருவார்கள் என கேள்வி எழுப்பினார்கள் ..எங்கள் கேள்விகளுக்கும் அதிகாரிகள் சரியான பதில் சொல்லவில்லை. மதியம் மாநகராட்சி மாநகர ஆணையர் சிவசந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அரசின் சட்டம் என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப் படுத்துங்கள் என்று தெரிவித்தார். கால தாமதமாக இந்த தகவலை தெரிவித்ததாலும் . மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி தொலைக்காட்சிகளில் காந்தி மார்க்கெட் நாளை முதல் பூட்டப்படும் ..பொன்மலை ஜி கார்னர் மாற்றப்படும் என செய்திகள் வருவதாலும் 

    மொத்த வியாபாரிகள் குழப்பமடைந்து காய்கனி  சரக்கு  வரவை வேண்டாமென விவசாயிகளிடமும் வெளிமாநில வியாபாரிகளிடமும் தெரிவித்ததால் இன்று காந்தி மார்க்கெட்டில் காய்கனி விலைவாசி ஒன்றுக்கு  மூன்று பங்கு விலை  உயர்ந்துள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள்  வரும் 14 நாட்களில்  ஊரடங்கு காலத்தில்  வருவாய் இல்லாத இந்த சூழ்நிலையில் தினசரி தேவைப்படும் காய்கறி விலையும் ஏற்றமா? என புலம்பிக்கொண்டே பொதுமக்கள் காய்கறியில் வாங்கினார்கள் 

    மேலும் அரசு அறிவித்தபடி காந்தி மார்க்கெட்டிலேயே வியாபாரம் செய்து பகல் 12 மணிவரை காய்கறி வியாபாரத்தை முடித்துக் கொள்கிறோம் அரசின் ஆணைப்படி காய்கறி வாகனங்களுக்கு தடை இல்லை என்ற சட்டத்தை ஏற்று தினசரி 12 மணிக்கு பூட்டும் காந்தி மார்க்கெட்டை இரவு 9 மணிக்கு திறந்து காய்கறி வாகனங்களை உள்ளே அனுமதித்து மூட்டைகளை மட்டும் இறக்கி வைக்க அனுமதிக்க வேண்டும் ..நாங்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வியாபாரம் செய்வோம் சங்கம் சார்பாக வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசமும் கபசுர குடிநீரும் சானிடைசர் வழங்கிவருகிறோம் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பிரச்சனையில் திருச்சி அமைச்சர்கள் மாண்புமிகு கே. என் ..நேரு அவர்களையும் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.. ஆகியோர்கள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி வியாபாரிகளான எங்களையும் பொதுமக்களையும் வருமானம் இல்லாத   இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நிம்மதியாக வாழ  வழிவகை செய்ய வேண்டுமென  கேட்டுக்கொள்கிறேன் ...

    தாழ்மையுடன் M.K.கமலக்கண்ணன் 

    தலைவர் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad