Header Ads

  • சற்று முன்

    அலட்சியமா? விழிப்புணர்வு இல்லையா?


    கொரோனா இரண்டாம் அலை படு தீவிரமாக பரவிவரும் வேளையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகவசம், கையுறை அணியவேண்டுமென அறிவுறுத்தி வரும் வேளையில் பொது இடங்களில் வீசக்கூடாது என்று யாரும் அறிவுறுத்தவில்லையா ? தொற்று பரவாமல் இருக்க பயன்படுத்தும் உடைகளை இப்படி பொது இடங்களில் வீசுவதால் தொற்று பரவ இது ஒரு வாய்ப்பாக மாறும் அலட்சியம் வேண்டாம்.

    மதுரை மாவட்டம் பனகல் சாலையில் உள்ள இளங்கோ மேல்நிலைப்பள்ளி அருகிலும் எதிரிலும் முக கவசங்கள்  மற்றும் கவச உடைகள் வீசப்பட்டு வருகின்றன..மேலும் சாலை ஓரங்களில், தெருக்களில் முககவசங்கள் வீசப்பட்டு தரையில் கிடக்கின்றன..தற்போது கவச உடைகளும் சர்வசாதாரணமாக வீசப்பட்டு வருகின்றன..தெருக்களில் கூட்டி குவித்து வைக்கபட்ட குப்பைகள் ஒரு குவியலுக்கு சராசரியாக ஒரு முககவசமாவது உள்ளது. மேலும் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று அப்பகுதியுள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பொது மக்களே தயவு செய்து தாங்கள் பயன்படுத்தும் முககவசங்கள், கவச உடைகளை உரிய முறையில் குப்பை தொட்டிகளில் கொண்டு சேர்க்கவும்,. இனி இதை தூய்மை செய்பவரும் நமது சக மனிதர்கள் தூய்மை  பணியாளர்கள் என்பதை அனைவரும் அறிய வேண்டும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad