Header Ads

  • சற்று முன்

    தி.மு.க அரசின் மக்கள்நலதிட்ட செய்திகளை குந்தம் விளைவிக்கும் பி.ஆர்.ஓ மோகன்

    வேலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருப்பவர்

    (பி.ஆர்.ஓ)அம்பலூர் சு.மோகன். இவர் செய்தியாளர்களிடம் நாகரீகமின்றிபேசிவருகிறார். மேலும் பெரிய நிறுவனம், சிறு நிறுவனம், வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை, தின பத்திரிக்கை என செய்தியாளர்களை தரம்பிரித்து அவர்களுக்குரிய மாரியாதை தராமல் அரசின் விதிகளுக்கு முரணாக செயல்பட்டு வருவதுடன் அவருக்கு தேவைப்படும் செய்தியாளர்களை மட்டும் செய்தி சேகரிக்க முக்கியத்துவம் தந்து வருகிறார்.

    மற்ற செய்தியாளர்களை ஏளனமாகப் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.   செய்தியாளர்களுக்கு. அரசு வழங்கும்     சலுகைகளை தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டும் வழங்கி மற்ற செய்தியாளர்களின் உரிமைகளை தட்டிப் பறித்து வருகிறார். பி.ஆர்.ஓ மோகன்  மீது செய்தியாளர்கள்  அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல புகார் மனுக்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை       தலைமைச் செயலகத்தில் உள்ள     செய்தி மக்கள் தொடர்புத்துறை  இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பியும் உள்ளனர்.  

    இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. அரசு நிகழ்ச்சிகளில் செய்தியாளர்கள் பெயர்களைச் சொல்லி பணத்தைவாங்கி ஆட்டை போடுவது வாடிக்கையாக கொண்டுள்ளார். பி.ஆ.ர்.ஓ மோகனை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி செய்தியாளர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பார்த்திபன்  செய்தியாளர்களிடம்  பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின் செய்தியாளர்கள் தர்ணாபோராட்டத்தை கைவிட்டனர்.

    அதன் பின்பி.ஆர்.ஓ மீது ஒரு புகார் மனுவை அவரிடம் அளித்தனர்.அ.தி.மு.க ஆட்சியில் கரைவேட்டி கட்டாதமாவட்ட செயலாளர்போல் செயல்பட்டு வந்த பி.ஆர்.ஓ மோகன் தி.மு.க அரசின் மக்கள் நல திட்ட  செய்திகளை ஒரு சில பத்திரிகைகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்றப்பத்திரிகைகளுக்கு வழங்காமல் திரைப்போட்டு வருகிறார்.  முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட களைகளை எடுத்து வருகிறார். அதேபோல் வேலூரிலும் பி.ஆர்.ஒமோகன் என்னும் களையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிங்கி எரியவேண்டும்என்று பத்திரிகையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.  பத்திரிகையாளர்கள் புகார் கொடுக்கும் போது பி.ஆர்.ஒ மோகன் அங்கிருந்தார். அப்போது கரகாட்டக்காரன் படத்தில் வரும் செந்தில் போல் ஒன்றும் தெரியாதது போல் முழித்துக் கொண்டிருந்தார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad