கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக 2000க்கு காண டோக்கன் நியாவிலை ஊழியர்கள் வீடுவீடாக கொடுத்தனர்
கொரோனா நிவாரண நிதி நான்காயிரத்தில் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து. ரேஷன் அட்டை ஒன்றுக்கு ரூபாய் இரண்டாயிரம் கொரோனா நிவாரண நிதியாக டோக்கன் வழங்கபடும் பணிகள் சென்னை ராயபுரம் வார்டு49 கிரேஸ்கார்டன் பகுதியில் ரேஷன் அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கபட்டது. முதல் 3 நாட்கள், ரேசன் கடை பணியாளர்களே ரேசன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்குவார்கள் எனவும் வழங்கப்படும் டோக்கனில், ரேசன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் செயல்பட வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு வரும் அனைவரும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை