கொரோன தொற்றால் உயிர் நீத்த காவலர்களுக்கு இன்று காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள். தலைமை காவலரின் திருவுருவப் படங்களுக்கு காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திரு. ஐ.அருள் சிறப்பு உதவி ஆய்வாளர் செம்பியம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர் கடந்த 6.5. 2021 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிர் நீத்தார்.
மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.ஆர் பாலாஜி வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கடந்த 7.5.2021 அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7 .5. 2021 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உயிர்நீத்தார்.
மேலும் சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த திரு. கே.சுரேஷ்குமார் என்பவர் கடந்த 1.5 2021 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் உயிர் நீத்தார். இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்களும். தலைமை காவலரும் போக்குவரத்து காவல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து வந்தார்கள். அர்ப்பணிப்புடன் முன்களப்பணி யாற்றி கொரோனா தொற்றால் உயிர்நீத்த அவர்களுடைய திருவுருவப்படங்களுக்கு வில்லிவாக்கம் காவல் நிலைய வளாகம் மற்றும் சிட்லபாக்கம் காவல் நிலைய வளாகத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் அதிகாரிகளுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை