Header Ads

  • சற்று முன்

    வடசென்னையில் போலீசர் இரவு நேரத்தில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்திற்க்கும் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் சென்னையயில் 200  இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன  சோதனை நடத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.அதன்படி சென்னையில் முக்கிய எல்லைகுட்பட்ட ராயபுரம்,காசிமேடு,தண்டையார்பேட்டை  பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து சென்னை ராயபுரம்,தண்டையார்பேட்டை,காசிமேடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கை மீறி அவசியமின்றி வெளியில் நடமாடுவோரை  காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad