• சற்று முன்

    தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

    அ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    திரு.வி.க.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.வா.நீலகண்டன், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, மத்திய சென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.சந்தானகிருஷ்ணன் உடனிருந்தார்.

    தி.மு.க., மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் திரு.அய்யாதுரை பாண்டியன், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சின்னத்திரை நடிகரும், சின்னத்திரை நடிகர் சங்க பொருளாளருமான, திரு.ரவிசங்கர், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

    திட்டக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.தமிழழகன், அதிமுகவில் இருந்து விலகி, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad