பம்மலில் ஏசி பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அண்ணா நகர் பகுதியில் சூரிய பிரகாஷ் ராவ் என்பவர் ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் காலையில் கடையை திறந்து வைத்து வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென கடையில் இருந்து புகை கிளம்பியது பயந்து போன சூரியபிரகாஷ் வெளியில் ஓடி வந்ததும் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் தாம்பரம் சானடோரியத்திலுள்ள தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை சுமார் 1 மணி நேரமாக போராடி அனைத்து வருகின்றனர்.அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்
கருத்துகள் இல்லை