மக்கள் நீதிமய்யம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்" -கமல்ஹாசன் வாக்குறுதி
தமிழகத்தில் மக்கள் நீதிமய்யம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் செந்தில் ஆறுமுகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இதனை கூறினார். பல்லாவரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் மற்றும் பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்
கருத்துகள் இல்லை