• சற்று முன்

    புதிய யுத்திகளை கையாளும் வேட்பாளர்கள்

    2021 தேர்தலில் வாக்கு சேகரிப்பதில் புதிய யுத்திகளை கையாண்டு வருகின்றனர். முன்பெல்லாம் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகர்த்துவந்தனர். அப்போது பொது மக்கள் விரும்பிய வேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவிப்பது மற்றும் ஆலம் கரைத்து ஊற்றுவார்கள். இது ஒவ்வொரு தேர்தலின் போது வாக்கு சேகரிப்பார்கள். அதையும் தாண்டி இப்போது அதிமுக திமுக அமமுக போன்ற கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதில் வித்தியாசமான யுத்திகளை பயன்படுத்திவருகின்றனர். எப்படியாவது வாக்குகளை பெற்றிட வேண்டும் என்கிற நோக்கம். வீட்டின் முன்புறம் துணிகளை தோய்க்கும் பெண்களிடம் அவர்கள் தோய்க்கும் துணிகளை வாங்கி வேட்பாளர்தோய்ப்பது, சலவை லாண்டரி கடையில் போய் அவர்கள் தேய்க்கும் துணிகளை வாங்கி இவர்கள் தேய்ப்பது, இரவு நேர மசாலா பால் கடையில் பால் ஆற்றுவது  இன்னும் சில வேட்பாளர்கள் மக்களோடு மக்களாக  தேநீர்கடைகளில் தேனீர் அருந்துவது போன்ற பாவலா செய்கின்றனர். இதையும் விளம்பரமாக வெளிவருகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது வேட்பாளர்கள் தங்கள் தரத்தை குறைத்து கொண்டு எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி ஒட்டு சேகரிக்கவும் தயாராக உள்ளனர் என்பது நிரூபணமாகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad