குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

பல்லாவரம் அடுத்த பம்மல் பேருந்து நிலையம் அருகே ஆ ராசா உருவபொம்மை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக முதலமைச்சரின்  தாயாரை குறித்து தரக்குறைவாக பேசிய திமுக  துணைப்பொதுச்செயலாளர் ஆ ராசா உருவபொம்மை எரித்து அதிமுகவினர்  ஆர்ப்பாட்டம்

அண்மையில் சென்னையில் நடைபெற்ற திமுக பிரச்சார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாரை தரக்குறைவாக பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசாவை கண்டித்து சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பேருந்து நிலையம் அருகில் அதிமுகவின்  பம்மல் நகரக் கழக செயலாளரும் முன்னாள் நகரமன்ற தலைவருமான வழக்கறிஞர் சி.விஇளங்கோவன்  தலைமையில் ஆ. ராசாவின் உருவபொம்மை எரித்து அவருக்கெதிராக முழக்கங்களையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.கட்சியின் பம்மல் நகர நிர்வாகிகள் துரை.தண்டபாணி, ஜெகநாதன்,அப்பு (எ)வெங்கடேசன் ,தா.முகுந்தன், மற்றும் இதில் எம்.சி.பாலவிக்ணேஷ், என்.சி.கே.நரேஷ் டிஎம்எஸ் வடிவேலு, G.R.விஜயகுமார்,கே.பிரபுராஜன்,பி.எம்.சுரேஷ், வழக்கறிஞர் பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்

கருத்துரையிடுக

புதியது பழையவை