சுற்றுசூழல் ஆர்வலரும், சமூக செயல்பாட்டாளருமான முகிலன் கைது !
சுற்றுசூழல் ஆர்வலரும், சமூக செயல்பாட்டாளருமான முகிலன், தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் சென்னிமலை டவுன் கிழக்கு புது வீதி பகுதியில் வசித்து வருகிறார். தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களாக முகிலன் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எல்.முருகன் உட்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தாராபுரத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக முகிலன் அறிவித்திருந்தார்.
இதற்காக இன்று காலை 7.30 மணி அளவில் தனது சென்னிமலை வீட்டில் இருந்து கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடியுடன் முகிலன் புறப்பட்டார். இது பற்றி தகவல் தெரியவந்ததும் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முகிலனை கைது செய்தனர்.
பின்னர் அவரை சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை