Header Ads

  • சற்று முன்

    தேர்தல் திருவிழாவா ! -- கொரோனா ஊரடங்கா !

    தேர்தல் வேட்பாளர்  அறிவித்த  பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் பிரமுகர்கள் தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம்  முழுவதும்  பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது.  இதே போல் கொரோனா தொற்று வீரியமும் அதனால் பாதிப்பும்  அதிகரித்து வருகிறது.  இந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 500க்கு கீழ் இருந்தது. சமீபத்தில்  அரசியல் கட்சி தலைவர் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமணையில் அனுமதித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 


    தேர்தல் நேரத்தில் 50,000 மேல் பணம் வெளியில் கொண்டு செல்லக்கூடாது. வாகன சோதனை என பல கெடுபிடிகளை போட்டு  தேர்தல் ஆணையம் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.   உயிர் கொள்ளும் கொரோனா தொற்று தற்போது விரிய பரிணாமத்தில் பரவி வருவதால் "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்பது  போல் உயிர் பலி அதிகரித்த பிறகு அரசு மற்றும் தேர்தல் ஆணையம்  கட்டுப்பாடு விதிப்பதைவிட, வாக்காளர்கள்  மீது அக்கறை கொண்ட தேர்தல் ஆணையம் உயிர் பலி அதிகரிக்கும் முன் குறிப்பாக  அரசியல் தலைவர்கள் பிரச்சார கூட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்றிலிருந்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க அரசியல் தலைவர்கள் பிரச்சார கூட்டத்தில்  கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.    




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad