தஞ்சையில் கணவரின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய சசிகலா
சசிகலா சிறையிலிருந்து வெளிவந்த பிறகு சென்னையில் ஓய்வுவெடுத்த தீவிர அரசியலில் ஈடுபடுவதாக முதலில் கூறியிருந்தார். சில நாட்களில் அரசியலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் ஒரு வார பயணமாக தஞ்சைக்கு வந்தார் சசிகலா. உறவினர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு ஆலய தரிசனம் செய்து வருகிறார் சசிகலா. ஶ்ரீரங்கம் கோவிலில் நேற்று வழிபாடு நடத்தினார். தஞ்சாவூருக்கு சென்ற சசிகலா கணவர் நடராஜனின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விளார் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
கருத்துகள் இல்லை