டி.டி. வி.தினகரனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.10 இடங்களில் இருந்து காணொளிக் காட்சிகள் வாயிலாகவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தின் வாயிலாக 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
கொரோனா தொற்றால் மறைந்த கழக பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களோடு செயல்படும் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை தமிழக முதலமைச்சர் அரியணையில் அமரவைக்க அயராது உழைக்க சூளுரை ஏற்கிறது," எனக் கூறப்பட்டுள்ளது.
டி.டி.வி. தினகரனை முதலமைச்சராக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து நம் ஆட்சியை அமைக்க வேண்டுமென நேற்று வி.கே. சசிகலா கூறியிருந்த நிலையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றை ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவர வேண்டுமென்றும் இந்தப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
30 ஆண்டுகால சிறை வாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களின் விடுதலை மனிதாபிமான அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் அணுகி அவர்களை விடுவிக்க அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் .இந்திய குடியரசுத் தலைவர் அறிவித்த 7 பேரின் விடுதலையை அறிவிக்க வேண்டுமென பொதுக்குழு வலியுறுத்திக்கிறது .
கருத்துகள் இல்லை