உலக சாதனைக்கான "செயற்கைக் கோள் ஏவுதல்" - துவக்க விழாவில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
ராமேஸ்வரத்தில் 2021 பிப்ரவரி 7, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்ற "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி பேலோட் க்யூப்ஸ் சவால் -2021" நிகழ்வில் மேல் அயனம்பாக்கம், வேலம்மாள் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
மொத்தம் 100 ஃபெம்டோ செயற்கைக்கோள்கள் இரண்டு உயரமான அறிவியல் பலூன்கள் வழியாக ஏவப்பட்டு அவை 100 கி.மீ தூரத்திற்குத் தரையிறங்கின. இந்நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 800 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வை ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையாகிய STEM நிறுவனம், இந்திய விண்வெளி மண்டலம் மற்றும் மார்ட்டின் குழுமத்துடன் இணைந்து மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
பள்ளி நிர்வாகம் மாணவர்களின் இந்த அரிய , போற்றத்தக்க முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்தியது.
கருத்துகள் இல்லை