36வது வார்டு மாநகராட்சியின் அலட்சிய போக்கு
சென்னை எருக்கஞ்சேரி 36 வார்டு 4 வது மண்டலம் உட்பட நெடுஞ்சாலையில் ட்ரான்ஸபாரம் அடியில் குப்பைகள் தேக்கமாக காணப்படுகிறது. துருநாற்றம் வீசும் கழிவு பொருள்களால் தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதாக பொது மக்கள் கருதுகின்றனர். இங்கு பெருச்சாலிகள் தங்குதடையின்றி இனப்பெருக்கம் செய்து கூடக்கூடமாக வாழ்கின்றன. இதனால் எலி காய்ச்சல் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொது மக்கள் கருதுகின்றனர். மேலும் குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். பெருச்சாலிகளால் ட்ரான்ஸ்பாரம் ஒயர்கள் துண்டிக்கப்பட்டால் பெரும் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக அஞ்சுகின்றனர்.
கருத்துகள் இல்லை