எட்டு மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு!
தமிழகத்தில் கொரோணா ஊரடங்கை அடுத்து சில தளர்வுகளுடன் பல துறைகள் செயல்படதொடங்கியது. இதனையடுத்து எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறக்கபட்டது. இதில் முதல் ஒரு பகுதியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர்.தியாகராயா கல்லூரி,பாரதி மகளிர் கல்லூரி,காசி நாடார் கல்லூரிகள் என பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
அதில் இன்று மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 50% பேர் மட்டும் வருகை தந்தனர். பகுதிவாரியாக மாணவர்கள் வருகை பட்டியல் அமைக்கபட்டு கல்லூரிகளுக்கு வருகை தருவார்கள்.
கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு முக்கிய சில விதிமுறைகள் படி முககவசம் அனிந்தும், சானிடைசர் கொண்டு கையை சுத்தம் செய்தும்,சமூக இடைவெளி பின்பற்றியும்,டிஜிட்டல் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகு கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றன
கருத்துகள் இல்லை