• சற்று முன்

    புழல் ஏரியில் குளித்த 3மாணவர்கள் சேற்றில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

    சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம், சக்தி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (18). இவர், முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வந்தார். அதே பகுதி பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (17). இவன், சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். வில்லிவாக்கம், திருவீதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிலீப்குமார் (19). இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் மூவரும் ஓட்டப்பந்தயம் பயிற்சி பெற்று வந்தனர். மேலும், இவர்கள் தனது நண்பர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று உள்ளனர். இந்நிலையில் காலை மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலீப்குமார் ஆகிய மூவரும், தனது நண்பர்கள் பிரகாஷ், ராஜீ, சைமன், தாமரை, அபின் ஆகிய 5பேர்களுடன் அம்பத்தூர் அருகே புத்தகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சி செய்துள்ளனர். பயிற்சி முடிந்து மதியம்  அம்பத்தூர் அருகே சூரப்பட்டு, மதுராமேட்டூர் பகுதியில் உள்ள புழல் ஏரி பகுதிக்கு வந்த 8பேரும் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அதில் பிரகாஷ், ராஜீ, சைமன், தாமரை, அபின் ஆகியோர் ஏரிக்கரையில் குளித்தனர். மேலும், மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலீப்குமார் ஆகிய மூவரும் ஏரியின் உள் பகுதிக்கு சென்று குளித்தபோது, அங்குள்ள செடி, கொடிகளுடன் சேற்றில் சிக்கி 3பேரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதை பார்த்த நண்பர்கள் 5பேரும் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தவுடன் ஓடி வந்த அப்பகுதி மக்கள் மூவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3பேரும் தண்ணீரில் மூழ்கியதால் அவர்களை பொதுமக்களால் காப்பாற்ற முடியவில்லை.  

    இதனை அடுத்து, பொதுமக்கள் மாதவரம், செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு வீரர்கள்  ஏரியில் இறங்கி 2மணி நேரம் போராடி மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலீப்குமார் ஆகிய மூவரின் சடலத்தை மீட்டனர். மேலும்,  சம்பவ இடத்திற்கு உறவினர்களும் பொதுமக்களும் திரண்டனர்.  தகவல் அறிந்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராஜகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு  வந்து.  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... மேலும்,  புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் ஏரியில் குளித்த 3மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad