பாமக நிர்வாகி பேருந்து மோதி பலி ! பேருந்தை தீயிட்டுக் கொளுத்தியதால் பட்டாபிராமில் பதற்றம்
பட்டாபிராம், அமுதூர்மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 45; பாமக திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர். இவர் மாலை பட்டாபிராம் அணைக்கட்டுச்சேரி பகுதியில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் அணுகு சாலை அருகே அமூதூர்மேடு புற்று கோவில் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக தனியார் நிறுவனப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை கிராம மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உருட்டுக்கட்டையால் பேருந்து கண்ணாடி உடைப்பு தீயிட்டுக் கொளுத்தினர். இதில் பேருந்து தீயில் இருந்து முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அறிந்த அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தீ விபத்து பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்
திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் ஆவடி ராஜன்
கருத்துகள் இல்லை