• சற்று முன்

    குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்

    குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் வருகின்ற 17.10.2020 முதல் 26.10.2020 ஆகிய பத்து நாட்கள் நடைபெற இருக்கும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், குலசேகரப்பட்டினம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராதிகா உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad