சூப்பர்வைசர் வங்கியில் இருந்து எடுத்து வந்த இரண்டரை லட்சம் கொள்ளை! சிசிடிவி கேமிராவால் பரபரப்பு
தனியார்தொழிற்சாலை சூப்பர்வைசர் வங்கியில் இருந்து எடுத்து வந்த இரண்டரை லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வி.ஏ.கரிம் ரோடு பகுதியில் தனியார் லாரி சர்வீஸ் ஒன்று உள்ளது. இங்கு சுரேஷ் என்பவர் அவர் பணிபுரியும் நிறுவனத்துக்கு பார்சல் ஏதும் வந்துள்ளதா என பார்க்க வந்தார். அப்படி வருவதற்கு முன் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூ.இரண்டரை லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் எடுத்து வந்த பணத்தை வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு பார்சல் சர்வீஸ் உள் சென்றார்.இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து லாரி பார்சல் சர்வீஸ் காவலாளியிடம் லாவகமாக ஒருவர் பேச்சுக் கொடுத்தனர். அதே நேரத்தில் இன்னொறு நபர் மேற்படி சுரேஷ் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
பின்னர் வெளியில் வந்து பார்த்த தனியார் சுரேஷ் பணப்பையை காணவில்லை என்று பதறினார் பின்னர் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை