அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் தமிழக முதல்வரின் தாயாருக்கு மலரஞ்சலி.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தலைமை நிலையச்செயலாளரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் தாயார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காலமானார். எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் அண்ணன் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயியம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை அவர்கள் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சேலம் மாநகர தலைவர் நேரு நகர் பி. முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. அம்பேத்கார், சங்ககிரி ஒன்றிய தலைவர் P.R பழனிசாமி,அரசிராமணி நகர தலைவர் M.அர்ச்சுணன்,கிளை தலைவர் G. இளங்கோவன் மற்றும் ஓமலூர் ஒன்றிய தலைவர் வீ.ம.ராம்ஜீ, சூரமங்கலம் பகுதி செயலாளர் சிவசந்திரன் மற்றும் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில இளைஞரணி செயலாளர் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கருத்துகள் இல்லை