நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட இளம்புவனம், மஞ்சநாயக்கம்பட்டி, வாலம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் கழக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள். இதனையடுத்து, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட இளம்புவனம் ஊராட்சியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!
உடன், தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நவநீதக்கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்!
கருத்துகள் இல்லை