தகவலறிந்த வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணாநகர் துணை கமிஷனர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், இந்த கொலை வழக்கில் வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் (30), அருண் (22), ருக்கேஷ்வரன் (19), சஞ்சய் (21), கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் (22), ஸ்ரீநாத் (21), திருநெல்வேலியை சேர்ந்த வைரமணி (20), திருவள்ளூரை சேர்ந்த கிஷோர்குமார் (26) ஆகிய 8 பேர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேல் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். அவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் செவிலியர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அனைவரும் நாளை மறுதினம் மீண்டும் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி காளி முத்துவேல் உத்தரவிட்டார். தொடர்ந்து 8 பேரையும் உடல் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார், பின்னர் வாணியம்பாடி கிளைச்சிறையில் அடைத்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:
சென்னை
