காவேரிபாக்கத்தில் ஈச்சர்லாரி மோதி வாலிபர் பலி
காவேரிப்பாக்கம் ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டாபுரம் No.20 சொக்கலிங்கம் முதலியார் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் எம் சுப்பிரமணி அவர்களின் மகன் எஸ் சுரேஷ் (வயது 30) என்பவர் செப் 4 இரவு சுமார் எட்டு முப்பது மணிக்கு காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிற்றுண்டி வாங்க சென்றார் வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது சித்தூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஈச்சர்லாரி வண்டி எண் :TE 5575 காவேரிப்பாக்கம் நெடுஞ்சாலையில் நெருங்கி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுரேஷ் அவர்கள் மீது மோதியது தகவலறிந்த காவேரிபாக்கம் காவல் துறையினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த சுரேஷ் அவர்களை மீட்டு காரின் மூலமாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது காவேரிப்பாக்கம் காவல்துறையினர் லாரி டிரைவரை கைது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை