Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டையில் பிரசவத்திற்காகச் சென்ற பெண் பிறந்த குழந்தையோடு பலி ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை!


    ராணிப்பேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காகச் சென்ற பெண்,  காலை பிறந்த குழந்தையோடு பரிதாபமாக இறந்த சம்பவம்சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பெண்ணின்உறவினர்கள் ஆரம்பசுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 23). கூலித் தொழிலாளியான கணேசன் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா (வயது 21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து அர்ச்சனா கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்காக அருகிலுள்ளஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அர்ச்சனா அடிக்கடி பேறுகால சிகிச்சைக்காக சென்று வந்துள்ளார்.பிரசவ வலி இந்நிலையில் இரவில் அர்ச்சனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.  பொதுவாக ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மாலை நேரம் வரைதான் மருத்துவர்கள் இருப்பார்கள். பிறகு செவிலியர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இரவு 11 மணிக்கு அர்ச்சனாவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு 

    சென்றபோது அங்கு குமாரி, கௌரி மற்றும்தேவி ஆகிய 3 நர்சுகள் மட்டுமே இருந்துள்ளனர். மருத்துவர்கள் இல்லைஎன்றும், நாங்களே பிரசவம் பார்க்கிறோம்  என்றும் அவர்கள் 3 பேரும் கூறியுள்ளனர். அப்போது அர்ச்சனாவுடன் அவரது தாய் விஜயாவும் இருந்துள்ளார்.இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அர்ச்சனாவுக்கு ஆண் குழந்தைபிறந்துள்ளது. பிறந்தவுடனே அர்ச்சனா கதறி அழுதுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் விஜயா, பிரசவம்பார்த்த நர்சுகளிடம் என்னஆச்சு என்று கேட்டுள்ளார். உங்கள் மகள் மிகவும்

    மோசமான உடல்நிலையில் உள்ளார், எனவேஅவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடுங்கள் என்று செவிலியர்கள் கூறியுள்ளனர்.இதனையடுத்து அர்ச்சனா மற்றும் பிறந்த ஆண் குழந்தை என 2 பேரையும்அருகில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு இன்று காலை 6 மணிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தாய் மற்றும் குழந்தை இருவரையும்பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும்

    இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அர்ச்சனா வின் குடும்பத்தினர் கடும்அதிர்ச்சிக்கு ஆளாகினர். இதனையடுத்து தாய் மற்றும் குழந்தையின் உடல் களை மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தவர்கள் சுகாதார நிலையத்தை முற்று கையிட்டு போராட்டம்நடத்தினர். அர்ச்சனாவின் இறப்புக்கு போதிய மருத்துவர்கள் இல்லாததும், நர்சுகளின் சிகிச்சைக் குறைபாடும்தான் காரணம் என்று  அவர்கள் கோஷம் எழுப்பினர். தகவலறிந்து ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி, வட்டார மருத்துவர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.  அர்ச்சனாவின்உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றபோது ஆம்புலன்சை அவர்கள் வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று அதிகாரிகள் கூறியதையடுத்து அவர்கள் அமைதியாகினர் . ராணிப்பேட்டை காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர் . ஆரமபசுகாதாரநிலையத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரும் இறந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad