ஆபாசமாக பேசிய ரசிகருக்கு நடிகை காஜல் பசுபதி நச் பதிலடி கொடுத்துள்ளார்.
ஹிந்தி தெரியாது போடா, ஐஅம் எ தமிழ் பேசும் இந்தியன் ஆகிய டிஷர்ட்களை பிரபலங்கள் அணிந்திருக்கும் போட்டோக்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நேற்று ஹிந்தி தொரியாது போடா என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டானது. நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் தானும் தனது மனைவியும் அந்த டிஷர்ட்களை அணிந்திருக்கும போட்டோவை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
தமிழ் படிக்க தெரியுமா?
அதனை பார்த்த நடிகையும் நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி, எனக்கு கிகி என்று ஷாந்தனுவின் மனைவி கீர்த்தியிடம் டிவிட்டர மூலம் கேட்டார். அதனை பார்த்த ஒரு நெட்டிசன், உனக்கு தமிழ் படிக்க தெரியுமா என்று கேட்டார்.
ஆபாசமாக பேசி அதற்கு மற்றொரு நெட்டிசன் ஏன் கத்து தரப் போறீயா என்று கேட்டார். இதனை பார்த்த அந்த நெட்டிசன், காஜல் பசுபதியை பாலியல் தொழிலாளி போல் சித்தரித்து ரொம்பவே ஆபாசமாக பேசினார்.
உன் குடும்ப தொழில்
அதற்கு நச் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை காஜல் பசுபதி. அதாவது உங்க வீட்டு தொழிலை நான் பண்றதில்லடா மேன், வகை வகையா பொண்ணுங்கள படுக்க கூப்பிடதான் ஹிந்தி படிக்க அவ்ளோ ஆர்வமாடா.. என கேட்டு சரமாரியாக விளாசியுள்ளார்.
வரவேற்பு
நடிகை காஜலின் இந்த பதிலை பலரும் வரவேற்றுள்ளனர். நடிகை காஜல் கோ, மவுன குரு, கதம் கதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் காஜல் பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை