• சற்று முன்

    சென்னையில் விதிமீறி செயல்பட்ட ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு


    சென்னை ராயபேட்டையில் திறப்பு விழா சலுகையாக ஒரு சட்டை நூறு ரூபாய் டீசர்ட் 9 ரூபாய்க்கு என்று அறிவித்து திறக்கப்பட்ட கடையை போலீசார் ஒரு மணி நேரத்திலே பூட்டு போட்டனர் .சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசண்ட் சாலையில் இன்று புதிய ஜவுளிக்கடை திறக்கப்பட்டது. முன்னதாக ஜவுளிக்கடை திறப்பை முன்னிட்டு 9 சட்டைகள் 999 ரூபாய்க்கும், ஒரு டிசர்ட் 9 ரூபாய்க்கும்,  ஒரு உள்ளாடை என  திறப்பு விழா சலுகையாக சென்னை நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

    ஒரு வாரத்திற்கு முன்பே டோக்கன் கொடுக்கபட்டு ஒரு டோக்கனுக்கு 9 சட்டை, ஒரு பனியன், 3 உள்ளாடை என மொத்தம் மதிப்பு 1000 ரூபாய் வசுலிக்கப்பட்டது. இதில் ஒரு சட்டை 120 ரூபாய், டோக்கன் விலை 50 ரூபாய் மொத்தம் 1050 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு டோக்கனும் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.

    இதையொட்டி அதிகாலை 4 மணி முதல், கடை முன்பு இளைஞர்கள் குவியத் தொடங்கினர். 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  சமூக இடைவெளியை பின்பற்றாமல் நீண்ட வரிசையில் நின்றனர். இளைஞர்கள் கூட்டத்தை போலீசாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

    8 மணி அளவில் கடை திறக்கப்பட்டு, சலுகை விலையில் ஆடைகள் விற்பனை தொடங்கியது. தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளிக்கடைக்கு வந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் விற்பனை நடைபெற்றதால் கடைக்கு பூட்டு போட்டு  விட்டு சென்றனர். கடை திறந்து ஒரு மணி நேரத்திலேயே பூட்டு போட்டப்பட்டதால் மிகுந்த வருத்தத்தில் கடை உரிமையாளர்கள் உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad