சிறுமியை கடத்தி சென்றது பாலியல் பலாத்காரம் செய்த அஜித்குமாருக்கு போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பாலே பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகளுக்கு வயது 17. அவருடைய அம்மா லட்சுமி தன் மகளை காணவில்லை என்று கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகார்செய்திருந்தார்.
புகாரின் பேரில் கந்திகுப்பம் காவல் நிலைய போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வநதார். விசாரணையில் செங்கொடி நகர் கந்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த அபிமன்னன் என்பவருடைய மகன் அஜித்குமார் வயது 23 என்பவர், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அஜித் குமாரை பிடித்து விசாரணை செய்ததில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று காட்டில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதி செய்தனர். இதையடுத்து அஜித் குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்
கருத்துகள் இல்லை