Header Ads

 • சற்று முன்

  உலகின் அதிக அலகுகளைக் கொண்ட பணத்தாளை சேகரித்து இருக்கும் திருச்சிக்காரர்

  ஜிம்பாவே நாடே அதிக அலகுகள்  கொண்ட பணத்தாளை அச்சிட்டு உள்ளது. இது குறித்து அறிவதற்காக திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் மற்றும் தலைவரும், 

  யோகா ஆசிரியருமான விஜயகுமாரிடம் பேசுகையில்,

  உலக நாடுகளின் காகிதப் பணம், பாலிமர் பணத்தை சேகரித்து ஆய்வு செய்து அதன் வரலாறு, கலை, கலாசாரம், விஞ்ஞானம், பொருளாதாரத்தை எடுத்துரைப்பது நோட்டேபிலி ஆகும் லத்தீன் வார்த்தையான நோட்டோ என்பது காகித பணத்தையும் பிலி  என்பது கிரேக்க வார்த்தையில் காதல் என்றும் பொருள்படுகிறது. காகித பணத்தின் மீது அன்பு என பொருள்படும் வங்கிப் பணத்தாளை சேகரிப்பது உலகளாவிய ஒரு பொழுது போக்காக உள்ளது.

  அவ்வகையில் பணத் தாள்களை சேகரிக்கக் கூடிய நாங்கள் நோட்டபிலிஸ்ட் என்று அழைப்பர்.வங்கிப் பணத்தாள்களை சேகரிக்கக் கூடிய வகையில் உலகில் 

  15 அலகுகளில்  14 பூஜ்ஜியங்களுடன்  Z $ 100,000,000,000,000 100 ட்ரில்லியன் டாலர் என மிக அதிக மதிப்பில் பணத்தாளை வெளிப்படையாக அச்சிட்டது ஜிம்பாவே நாடாகும். ஜிம்பாப்வே நாட்டினை தெற்கு ரொடிசியா என அழைப்பர்.


  வெள்ளை சிறுபான்மை அரசிடமிருந்து போராடி விடுதலை பெற்ற நாடாகும். விடுதலைபெற்ற ஜிம்பாப்வே முதல் அதிபர் கேனான் பனானா ஆவார். இதன் தலைநகர் ஹராரே ஆகும் ஜிம்பாவே நாட்டில் செவா,சிப்பார்வே, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை பேசுகிறார்கள்.

  இங்கு கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர்கள் பெரும்பாலானோர் உள்ளனர். உயர் பணவீக்கம் காரணமாக ஜிம்பாவே 2009 இல் தனது சொந்த நாணயத்தை பணமாக்குதல் செய்தது.

  நாட்டின் மத்திய வங்கி 1 டிரில்லியன்,  10 டிரில்லியன் மற்றும் 100 டிரில்லியன் டாலர் பணத் தாள்களை வெளியிட்டது.

  ஜிம்பாப்வே அதிகப்படியான பணவீக்கத்திலிருந்து -2.3% பணவாட்டத்திற்கு மீண்டது

  (சி.என்.என்)அமெரிக்க டாலர், தென்னாப்பிரிக்க ரேண்ட், பிரிட்டிஷ் பவுண்டு, இந்திய ரூபாய், ஜப்பானிய யென் மற்றும் சீன யுவான் பொதுவானதை ஜிம்பாப்வே பயன்படுத்தப்படக் கூடும்.

  நாணயங்கள் ஹைப்பர் இன்ஃப்ளேஷனானது கொண்டு நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக 2009 ஆம் ஆண்டிலிருந்து, ஜிம்பாப்வே அதன் சொந்த நாணயங்களைப் பயன்படுத்துகிறது, இது 5,000 சதவிகிதத்திற்கும் அதிகமான பணவீக்கத்திற்குப் பிறகு கைவிடப்பட்டது, இது அடிப்படையில் பயனற்றது. பல நாணயங்களைப் பயன்படுத்தும் இந்த முறை -2.3% பணவாட்ட விகிதத்திற்கு வழிவகுத்ததாக ஜிம்பாப்வேயின் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

  "நாங்கள் உறுதிப்படுத்த பல நாணய முறைக்கு மாறினோம், பணவீக்கம் 0% ஆக குறைந்தது, அது மாயமானது" என்று ஜிம்பாப்வே ரிசர்வ் வங்கி ஆளுநர் ஜான் மங்குத்யா கூறினார்.

  $ 1,000,000,000,000  (ஒரு டிரில்லியன்)  $ 10,000,000,000,000 (பத்து டிரில்லியன்)

  Z $ 100,000,000,000,000 (100 டிரில்லியன்)

   உள்ளிட்ட  மிகைப்படுத்தப்பட்ட மதிப்பில் ஜிம்பாப்வே நாட்டில் பணத்தாள்கள் கையாளப்பட்டன.

  2009 ஆம் ஆண்டில் பணவீக்கம் 230,000,000 சதவீதத்தை எட்டியபோது, ​​நாட்டின் ரிசர்வ் வங்கி - வானத்தில் உயர்ந்த பணவீக்கத்தைக் கொண்டிருக்க இயலாமையால் அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்தது.

  அதிகப்படியான பணவீக்கம் முதல் -2.3% பணவாட்டம் வரை, மங்குத்யா கடினமான ஆண்டுகளை தெளிவாக நினைவில் கொள்கிறார். "இது மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது," என்று  ஒப்புக்கொண்டார்.

   "அந் நேரத்தில் பொருளாதாரம் எதிர்கொள்ளும் அசுரனை எதிர்த்துப் போராடுவதற்கான கருவிகள் அவர்களிடம் இல்லை."

  நாடு பணத்தை அச்சிட வேண்டியிருந்தது. விலைகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறும், இதனால் ஏற்ற இறக்கங்களை சுற்றி மன அழுத்தம் சுழலும், இது உயர் பணவீக்கத்தின் பேரழிவு விளைவுகளில் ஒன்றாகும்.

  அமெரிக்க டாலர் தற்போது ஜிம்பாப்வேயில் விருப்பமான நாணயமாக உள்ளது. ஆனால்  ஜிம்பாப்வே நாட்டின் Z $ 100,000,000,000,000 டாலர் மதிப்பு சுமார் ரூ 400மட்டுமே ஆகும். 

  இது சமூக வலைத்தளங்களில் ஒரு புதுமையான பொருளாக ஆச்சரியப்படும் பொருளாக பொது மக்களால் பார்க்கப்படுகிறது.ராஜ்ஜியங்கள் பூஜ்ஜியங்களானால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என பொதுமக்களால் பார்க்கப்பட்டது. மிகை பணவீக்கத்தால் வீழ்ந்த பணத்தாள் என்றாலும் உலக அளவில் அதிக மதிப்பில் அச்சிட்ட பணத்தாள் ஆக ஜிம்பாப்வே பணத்தாள் விளங்குகிறது.

  இதனை நோட்டபிலிஸ்ட் ஆகிய நாங்கள் சேகரித்து அந்நாட்டின் வரலாறு கலை, கலாச்சாரம், விஞ்ஞானம், பொருளாதாரத்தினைபொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் எடுத்துரைக்கின்றோம் என்றார்.

  கருத்துகள் இல்லை