Header Ads

  • சற்று முன்

    மாணவர்களுக்கு தற்கொலை என்றும் நிரந்தர தீர்வு அல்ல.

    தற்கொலை என்பது நிரந்தரம் அல்ல ! தற்கொலை ஒரு கோழையின் அங்கிகாரம். மாணவர்கள் வாழ பிறந்தவர்கள்,. வாழ்க்கையின் முதற் படியை தேர்வு என்கிற ஒரு சாதாரண படி, இந்த படியில் அடியெடுத்து வைக்கும் போது வெற்றி, தோல்வி சகஜம். வெற்றியும், தோல்வியும் நிரந்தரம் அல்ல. வெற்றியில் நிலைத்தவனும் யாரும் இல்லை. தோல்வியில் நிலைத்தவரும் யாருமிலர். கண்டவர் விண்டதில்லை,விண்டவர் கண்டதில்லை.

    தேர்வு பயம் முதலில் அகற்றப்பட வேண்டும். எதையும் சந்திக்க மாணவர்கள் தயாராக இருக்கவேண்டும். தோல்வியை கண்டு துவண்டுவிட கூடாது. நம்மை தேர்ச்சி செய்ய அவர்களுக்கு திறமை பத்தவில்லை என்று நினைக்க வேண்டும். நம் வாழ்க்கையை நிர்ணயிக்க நீட் ஒன்றும் அஸ்திவாரம் அல்ல. நீட் தேர்வு தோல்வி வாழ்க்கையை அழிக்கும் அஸ்திரமும் அல்ல.தோல்வி நம்மை தற்கொலை எண்ணத்திற்கு இடம் கொடுக்க கூடாது.

    தோல்வியை கண்டு பயம் கொள்ளலாகாது அதை தூக்கி மிதித்திட வேண்டும்.  தற்கொலை எண்ணத்தை தூக்கி எரிந்து நம் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினரக்ள் நினைத்து வாழ துணிவு கொள்ள வேண்டும். நீட் தேர்வு என்பது மேகம் மூட்டம் போல மேக மூட்டம் மழைக்கு வேண்டுமென்றால்  உகந்ததாக இருக்கலாம். நமக்கு சாதாரண மூட்டம் தான் . மேக மூட்டம் வந்தால் மழை வந்ததாகவே வேண்டும் என்று அர்த்தம் இல்லை  அது போல நீட் தேர்வு ஒன்றும் நம்மை ஆட்டி படிக்கும் ஆயுதம் அல்ல.  ஆகவே மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை தவிர்த்து  மேம்ப வாழ கற்றுக் கொள்ளவேண்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad