திருவாடானையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது
திருவாடானை தெற்கு ஒன்றியம் சார்பில் தனியார் மகாலில் பல்வேறு கட்சிகள் இருந்து வந்த மாற்று கட்சியினர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அந்த இணைப்பு விழா திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, ஒன்றிய பெருந்தலைவர் முகம்மது முக்தார் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அந்த இணைப்பு விழா இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஏற்பாடுகள் செய்து நன்றியுரையாற்றினார். மாற்று கட்சியில் இருந்து தி.மு.கவில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்
கருத்துகள் இல்லை