சென்னை ராயபுரம் ஜீ.ஏ.ரோடு ரெய்னி மருத்துவமனை அருகே சாலை நடுவே கழிவுநீர் வடிகால் மூடி உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துங்கள் கடந்து செல்ல சிரமமாக உள்ளதாக அன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இன்று எதிரொலியாக சென்னை மாநகராட்சி,கழிவுநீர் வடிகால் இணைந்து விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து சீர்செய்தது.இதன் விளைவாக நம் மக்களின் சப்தம் செய்தி எதிரொலியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மேலும் மக்களின் இன்னலை கருத்தில் கொண்டு துரிதமாக பணியாற்றிய சென்னை பெரு நகர மாநகராட்சி மற்றும் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு நம் மக்களின் சப்தம் ஆசிரியர் குழு சார்பாக வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம் .
கருத்துகள் இல்லை