திருமணம் தள்ளி போனதால் மனம் உடைந்த மணமகன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் கல்யாணத்தை அடுத்த ஆண்டு நடத்தலாம் எனக் கூறியதால் மணமகன் தற்கொலை செய்துகொண்டனர்._
திருப்பத்தூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 29), கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் பெண் வீட்டார் திருமணத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்ததும் நடத்தி கொள்ளலாம் எனக் கூறி உள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன் கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்து, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டை ரோடு 4-வது தெருவில் வசித்து வருபவர் ரவி. இவரின் மகன் ஜெகதீசன் (வயது 29), சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார். அவர், திடீரென தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
கருத்துகள் இல்லை