மின்னல் தாக்கியதில் பசுவும், கன்று குட்டியும் பலியான சோகம் சோகத்தில் முழுகிய கிராமம்
மங்கலக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஊமை உடையான் மடை கிராமத்தில் நேற்று மாலை பலத்த இடியுடன் மழை பெய்து கொண்டிருந்தது அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவருடைய பசுமாடும் கன்றுக்குட்டியும் அருகில் மரத்தினடியில் கட்டப்பட்டிருந்தது. திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடும் கன்று குட்டியும் உயிரிழந்தது. இதுகுறித்து திருவாடனை தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என மாதவன் தாசில்தார் தெரிவித்தார்.ஒரே நேரத்தில் பசுவும் அதன் கன்று குட்டியையும் மின்னல் தாக்கி உயிர் இழந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் இல்லை