முன்னாள் சிறைவாசிகளுக்கு 2.25 இலட்டசம் நலதிட்ட உதவிகள் சிறைத்துறையினருக்கு மாவட்டஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் இஆப வழங்கினார்
முன்னாள் சிறைவாசிகளுக்கு 2.25 இலட்டசம் நலதிட்ட உதவிகள் சிறைத்துறையினருக்கு முக கவசம், கைசுத்திகரிப்பான், கையுறைகள், மாவட்டஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் இஆப வழங்கினார்
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் சிறையிலிருந்து விடுதலையான 9பேருக்கு இரண்டு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நலதிட்ட உதவிகளையும் சிறைதுறைக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான், கையுறை ஆகியவற்றை வேலூர் மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளுக்கும் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்,இஆப அவர்கள் வழங்கினார்.
இவ்விழா மாவட்ட அலுவலகத்தில் 21.09.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு வரவேற்று பேசினார். நிகழ்வுகளை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தொகுத்து பேசினார்.
வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எம்.ஆண்டாள், பொருளாளர் குமரன்.ஆர்.சீனிவாசன் வேலூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு மைய கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி, மண்டல நன்னடத்தை அலுவலர் ஹஜாகாமாலுதீன், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர்கள் (வேலூர்) ஆர்.சரவணன், (செய்யார்) பிரபாவதி குடியாத்தம்-மூவேந்தன் செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.நரசிம்மன், திருமாமறன் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் வேலூர் மத்திய சிறை, வேலூர் மகளிர் தனிச்சிறை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள கிளை சிறைகளுக்கும் முக கவசம், கை சுத்திகரிப்பான், கையுரறகள் ஆகியவற்றையும்
முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு விடுதலையானவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுதலையானவர்கள் ஆடு, கறவை மாடு வாங்கவும், பெட்டி கடை வைக்கவும், ஊதுபத்தி உற்பத்தி செய்து பிழைக்கவும் உதவிடுமாறு வேலூர், திருப்பத்தூர், ஆகிய நன்னடத்தை அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளவர்களின் மனுக்கள் மீதான விசாரனை அறிக்கையினை மண்டல நன்னடத்தை அலுவலரின் பரிந்துரையின் பேரில் அவர்கள் பிழைக்க உதவிடும் வகையில் தலா ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வீதம் இரண்டு இலட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் நிதிஉதவிகளை காசோலையாக வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்,இஆப அவர்கள் வழங்கினார்.
கருத்துகள் இல்லை