• சற்று முன்

    கோவில்பட்டி பகுதியில் திருட்டு பைக்கில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது - 11பவுன் நகை, பைக் பறிமுதல்

    கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் கட்டாலங்குளம் இந்திரா நகரைச் சேர்ந்த சவரியப்பன் என்பவரது மனைவி ரீட்டாள். இவர் நேற்று தனது நிலத்தில் விவசாய பணிகளை முடித்து விட்;டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த போது, பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் ரீட்டாள் கழுத்தில் இருந்த 5பவுன் தங்கநகையை பறித்து கொண்டு தப்பியோடினர். இது குறித்து நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் ரீட்டாள் புகார் அளித்தார். 


    இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கயத்தார் - கடம்பூர் சாலையில் தெற்கு மயிலோடையை சேர்ந்த உடையார்பாண்டி என்பவரது மனைவி மகேஷ்வரி தனது இரு சக்கர வாகனத்தில் கயத்தார் நோக்கி சென்று கொண்டு இருந்த போது, பின்னால் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், முன்னாள் மகேஷ்வரி பைக் மீது இடிப்பது போன்று சென்றுள்ளனர். இதில் நிலைகுலைந்து போன மகேஷ்வரி சாலையில் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் மகேஷ்வரிக்கு உதவி செய்வது போல நடித்து, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 6பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு தப்பியோடி உள்ளது அந்த மர்ம கும்பல். இது குறித்து மகேஷ்வரி கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அடுத்தடுத்து நடைபெற்ற இரு சம்பவங்களை தொடர்ந்து போலீசார் உஷராகி வாகன சோதனை தீவிரப்படுத்தினர். மேலும் மகேஷ்வரியிடம் நகை பறித்து செல்லும் போது, அப்பகுதியில் இருந்த சிலர் மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் பைக்கில் தப்பியோடி விட்டனர். இருப்பினர் அப்பகுதியில் இருந்தவர்கள் பைக் நம்பரை பார்த்து, போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி நோக்கி செல்வதாக தகவல்கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைகதிரவன் ஆலோசனையின் பெயரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி தலைமையிலும், உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி தலைமையிலும் சிறப்பு உதவி ஆய்வாளர் நாரயணசாமி தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்ம ஆசாமிகளை கைது செய்ய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். ஆய்வாளர் சுகாதேவி தலைமையிலான தனிப்படையினர் நாலாட்டின்புதூர் முக்குரோட்டில் வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்த போது, பைக்கில் வந்த இருநபர்கள் போலீசாரை பார்த்ததும், அங்கிருந்த பாலம் அருகே நிறுத்தி விட்டு, காட்டு பகுதிக்குள் தப்பியோடியுள்ளனர். இதனை பார்த்த போலீசார் இருவரையும் விரட்டிச்சென்றுள்ளனர். அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தினை தாண்டி சென்ற மர்ம ஆசாமிகள் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் மதுரை மாவட்டம் மேலூர் தாலூகா கீழவளைவைச் சேர்ந்த அய்யனார், சூர்யா என்பது தெரியவந்தது. மேலும் கட்டாலங்குளம், கயத்தாரில் 2 பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது மட்டுமின்றி, இருவரும் பயன்படுத்திய பைக்கும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனேரி காவல் நிலைய எல்லைக்குட்டபகுதியில் திருடி, நம்பரை மாற்றி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, 11பவுன் தங்க நகை, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி, சட்டவிரோதமாக மது விற்பனை என பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வேறு இடங்களில் எதுவும் திருட்டில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினரை டி.எஸ்.பி.கலைகதிரவன் பாராட்டினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad