Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.11 கோடி மதிப்பிலான 5 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்த அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தல் மற்றும் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு. ரூ.1.11 கோடி மதிப்பிலான 5 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.74.87 லட்சம் மதிப்பிலான 6 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இனாம்மணியாச்சி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவுகளை சேகரிக்கும் தலா ரூ.3 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் 9 வாகனங்களின் பணிகளை துவக்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன், கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, ஒன்றிய பொறியாளர் தமிழ்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விமலாதேவி, ராமர், கிருபாகரன் அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன்,  அன்புராஜ், வண்டாணம் கருப்பசாமி, இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad