வாணியம்பாடியில் ரேஷன் அரிசி கடத்தல் லாரி பிடிக்க செல்லும் போது லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சித்தீகாபாத் பகுதியில் லாரி மூலம் ரேஷன் அரிசி கடுத்துவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பு செய்தியாளர்கள் குழு அங்கே சென்றது. அப்போது செய்தியாளர்களை பார்த்த ரேஷன் அரிசி கடத்தல் காரர் அன்வர் பாஷா என்கிற அன்னு என்பவர் செய்தியாளரை செய்தி சேகரிக்க விடாமலும், உடனடியாக அப்பகுதியை விட்டு லாரி எடுத்து செல்ல லாரி ஓட்டுனருக்கு உத்தரவிட்டார். அப்போது தனியார் தொலைகாட்சி செய்தியாளர் லாரி முன்பாக நின்று வீடியோ காட்சி பதிவு செய்து கொண்டு இருந்தார். இதனை அறிந்த லாரி ஓட்டுனர் லாரியை அவர் மீது மோதும் வகையில் இயக்கினார். இதனை தொடர்ந்து கடத்தல் காரர் அந்த செய்தியாளரை வலுகட்டாயமாக தூக்கி தள்ளி விட்டு ரேஷன் லாரியை ஓட்டி தப்பித்தார்.
சம்பவம் குறித்து வட்டாசியர் மற்றும் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரியை பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்றனர். அப்போது வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு என்ற இடத்தில் வடசேரி கூட்டு சாலை வளைவில் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழுந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர் தப்பி தலைமறைவானார். பின்னர் லாரி மற்றும் சுமார் 3 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து ஆம்பூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகினறனர்.
இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ரேஷன் அரிசி கடத்தி வந்த அன்னு என்பவர் வீட்டை சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் அன்னுவின் மூத்த மகள் ஆயிஷா(23) மற்றும் அவரது தங்கை இருந்தார். அப்போது பெண் போலீசார் உதவியுடன் வீட்டில் சோதனை செய்து கொண்டு இருந்த போது திடீரென ஆயிஷா வீட்டின் ஒரு அறையில் புகந்து தாழ்பாள் போட்டுக்கொண்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறையின் கதுவை கிடப்பாரால் உடைத்து உள்ளே சென்று ஆயிஷாவை மீட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் அண்ணுக்கு சொந்தமான மூன்று வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 500 கிலோ ரேஷன் அரிசி, கோதுமை, 5 எரிவாய்வு சிலிண்டர்கள், 70 லிட்டர் கிரோசீன், ரேஷன் அட்டைகள் மற்றும் தையல் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தற்கொலைக்கு முயன்ற ஆயிஷாவை சிகிச்சிக்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை