Header Ads

  • சற்று முன்

    புலம்பெயர்ந்தோருக்கு தொழில் துவங்க நிதி உதவி முகாம் நடைபெற்றது

    தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் இராணிப்பேட்டை மாவட்டத்தில்ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி சோளிங்கர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட207கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம்புலம்பெயர்ந்து கொரோனா காலகட்டத்தில் மீண்டும் சொந்த கிராமத்திற்கே திரும்பிய இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க நீண்ட கால கடனாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை தொழிலின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. காவேரிப்பாக்கம் ஒன்றியம்,சிறுகரும்பூர் கிராம ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட வட்டார அலுவலகத்தில் நடைப்பெற்ற இதற்கான பயனாளிகள் தேர்வு மற்றும் ஆலாசனை முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் 26 இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க ரூ. 26 இலட்சம் கடன் உதவி வழங்கினார். 

    மேலும் இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்ற ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய தனிநபர்  தொழில் முனைவோர்களையும்,  நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோரையும் கள ஆய்வு செய்தார். தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் தமிழ் மாறன் வரவேற்புரை மற்றும்திட்டவிள்ளக் உரையாற்றினார். மேலும்இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்ட அலுவ லர் ஆர்டிஓ தமிழ்நாடுஊரக  புத்தாக்கத் திட்டத்தின்  இளம் வல்லுநர் செயல் அலுவலர், வட்டாரஅணித் தலைவர் – பணியாளர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் பணியாளர்கள்,திட்டப் பயனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞயர்கள் கலந்துக்கொண்டனர்.

    செய்தியாளர்  : ஆர்.ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad